சில மாதங்களாக ஏற்ற-இறக்கத்துடன் இருந்த ஆபரணத் தங்க விலை இன்று (ஆக.20) குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,180 என்றும், ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.125, ஒரு கிலோக்கு ரூ.1,25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்குபவர்களுக்கு இன்றைய விலைச் சரிவு சிறிய நிம்மதியை அளித்துள்ளது.