தமிழ்நாட்டில் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், இன்று (அக்.09) சென்னையின் நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மிரட்டலால் பரபரப்பு நிலவ, தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்களது சோதனை முடிவில், இது வெறும் மிரட்டல் முறையேயாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
