தமிழக அரசியல் அரங்கில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வைஷ்ணவி. தமிழக வெற்றி கழகத்தின் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் நடிகர் விஜய் மீது கடுமையாக விமர்சனம் செய்து, அவர் அரசியலில் காட்டும் நடிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். “தன்னை வென்ற ஒருவனால் மட்டுமே தரணியை வெல்ல முடியும்” என கலைஞர் கருணாநிதி கூறியதைக் குறிப்பிட்ட வைஷ்ணவி, “பத்து நாளாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை என கூறி மக்கள் அனுதாபம் பெற முயல்கிறார் விஜய்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தலைவராக இருக்க வேண்டிய உறுதி, நிலைப்பாடு, தொண்டர்களை வழிநடத்தும் திறன் போன்ற பண்புகள் விஜயிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். “ஒரு உண்மையான தலைவன் தன்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்துக்கொண்டு அடுத்தக்கட்ட தலைவர்களையும் தொண்டர்களையும் வழிநடத்துவார்;
View this post on Instagram
“>
ஆனால் இங்கு தலைமைக்கே தகுதி இல்லை” “சிஎம் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டுமே நிறையா இருக்கு, ஆனால் அதற்கான திறனோ தகுதியோ இல்லை” எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
