கடந்த பத்து நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராஜ்மோகன் தலைமறைவாக இருப்பதாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியிருந்தன. இதனால் அவர் குறித்து பல யூகங்கள் மற்றும் அரசியல் வதந்திகளும் எழுந்தன.

இந்நிலையில், ராஜ்மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமான பதிவொன்றை வெளியிட்டு மவுனத்தை முறித்துள்ளார். “வேதனையில் இருந்து மீள முடியவில்லை… முடியாது என்றே தோன்றுகிறது. உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

மேலும், “இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நீண்டவை — பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும், அவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பலரிடமும் உணர்ச்சி பூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் அவரது உறுதியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி வருகின்றனர்.