மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான விகே சசிகலா குடும்பத்தில் துயரம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் கணவரும் “புதிய பார்வை” இதழின் ஆசிரியருமான நடராஜன், 2018ஆம் ஆண்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது இளைய சகோதரரான ராமசந்திரன் உடல் நலக்குறைவால் இன்று (அக்.13) காலமானார்.
இந்த செய்தி சசிகலா குடும்பத்தினரை உள்பட உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, விகே சசிகலா நேரிலாக சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன
#கண்ணீர்_அஞ்சலி
மாண்புமிகு சின்னம்மா அவர்களின் கணவர்
மறைந்த திரு. M.நடராஜன் அவர்களின்#இளைய_சகோதரர் #திரு_M_ராமசந்திரன்
அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.
அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சசிகலா
இறுதி அஞ்சலி செலுத்தினார்.@AmmavinVazhi pic.twitter.com/miQ4OZbyvo— N.Nanthagopal.MBA (@Gopal56064478) October 13, 2025
“>
