அதிமுக கட்சி அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா சற்று நேரத்தில் திமுகவில் இணைய இருக்கிறார். இவர் முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்ததால் அவரை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மீண்டும் அதிமுகவில் அவர் இணைந்த நிலையில் சமீபத்தில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கடமையாக விமர்சித்தார்.
அதாவது பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் காலூன்ற முடியாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் அவர் விமர்சித்திருந்தார். அதே நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்றும் கூறினார். அவருடைய இந்த பேச்சுக்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அன்வர் ராஜா தற்போது அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை சென்றுள்ளார். மேலும் அவர் சற்று நேரத்தில் திமுகவில் இணைய இருக்கிறார்
