சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10014 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 126 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.