காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர் மக்களும் நெஞ்சில் அடித்து அடித்து கதறி அழும் காட்சி பார்ப்பவர்களை துடிதுடிக்க வைக்கிறது.