தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவிவரும் நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்காகப் பள்ளிக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் அனைவரும் சென்ற பிறகு பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்தியுள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவிகளின் ஆண் நண்பர் ஒருவர் தான் பள்ளிக்கு மதுபாட்டிலும், உணவையும் கொண்டுவந்து கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாகத் தக்கலை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>

 

கல்விக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் மது மற்றும் போதைப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.