தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரி ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் மீண்டும் நேரில் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன் 113 எம்.எல்.ஏ-க்களின் பலம் தன்னிடம் இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை நிரூபிக்க கூடுதல் ஆதரவைத் திரட்டும் முனைப்பில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய சந்திப்பின்போது மற்ற கட்சிகளின் ஆதரவு கடிதங்களை விஜய் ஆளுநரிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதால், விரைவில் புதிய அரசு அமைவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
