தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு பிரச்சாரம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 குடும்பத்தினருக்கு அரசு வேலை அவரவர் தகுதிக்கு ஏற்ப வழங்கினார்.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் தற்காலிக அடிப்படையில் வேண்டுமானால் பணி வழங்கலாம் நிரந்தரமாக பணி வழங்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கரூர் சம்பவத்தில் நடந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை தமிழக அரசு மீறி உள்ளதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில் தினம் தோறும் சாலை விபத்தில் பலர் உயிரிழப்பார்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பினர். மேலும் இதன் காரணமாக கரூர் சம்பவத்தில் வழங்கப்பட்ட அரசு வேலைகள் செல்லாது எனவும் முதல்வர் விஜய் வழங்கிய பணி ஆணைகள் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.