தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் சென்னை கடற்கரைகளில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை அருகே வரும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.