மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்று கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது. ஆனால் அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் என கூறி மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கக்கூடிய நிதியை ஒதுக்காமல் இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத அண்ணாமலை, எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த எங்கள் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு நியாயமாக பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதியை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறது. தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பாஜகவுக்கு பிடிக்காது என தமிழன் பிரசன்னா கூறியுள்ளார்.
