பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. முதல் மாநாட்டிலேயே விஜய் தனது அரசியல் கொள்கைகள், கட்சி கொடி விளக்கம், நிலைப்பாடுகள், அரசியல் தலைவர்கள், குறித்து விரிவாக பேசினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது.

அதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அரசியலில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார் விஜய். இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் நினைவு நாளான இன்று தனது அலுவலகத்தில் இருக்கும் அவரது சிலைக்கு விஜய் மாலை போட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.