மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திராவிட மாடல் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. சுய நினைவற்றவரை போல் அண்ணாமலை பிதற்றுகிரார். நாவடக்கம் இல்லாதவர் அண்ணாமலை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் நிலை கண்ணாடி முன் நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசை கட்டி நிற்கும். அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றி பேசுவது அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
