சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது மாலை 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதேபோன்று ஒரு கிராம் 75 ரூபாய் வரையில் அதிகரித்து 11500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை செய்பவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
