அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத செங்கோட்டையன் நேற்று பட்ஜெட்டின் போது அதிமுக எம்எல்ஏக்களுடன் அவர் இல்லை. இதைத்தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்களுடன் அமராமல் சபாநாயகர் அறைக்கு சென்று அங்கு அமர்ந்தார்.

இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பிரச்சனை இருப்பது உறுதி என்றே கூறப்படுகிறது. ஆனால் இதனை செங்கோட்டையன் ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறார். இருப்பினும் அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போது அவர் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக சமீப காலமாகவே செய்தி பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது