பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் (Zomato) பெயரில், “பிரியாணி என்பது இரவு உணவு, அது சம்மதம் (Consent) அல்ல” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 370 ரூபாய் பிரியாணி நோட்டிபிகேஷன் ஸ்கிரீன்ஷாட் முற்றிலும் போலியானது என்று அந்த நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
தங்களது நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி யாரோ விஷமிகள் இந்தத் தரக்குறைவான செய்தியைப் பரப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜோமாட்டோ நிர்வாகம், அப்படி ஒரு நோட்டிபிகேஷனைத் தங்களது நிறுவனம் எழுதவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவோ இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இணையத்தில் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் கிளப்பிய இந்த விவகாரத்திற்கு, ஜோமாட்டோ நிறுவனம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ள விபரம் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
