தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜனநாயக கடமையை ஆற்ற பலரும் ஆர்வமாக வந்து ஓட்டு போட வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு பெண் ஓட்டு போட வந்த நிலையில் தன்னுடைய ஓட்டை யாரோ போட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கொடுத்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இதேபோன்று சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியிலும் உமா மகேஸ்வரி என்ற பெண் வாக்களிக்க சென்ற போது அவருடைய ஓட்டையும் யாரோ போட்டு விட்டார்கள் என்று புகார் கூறியுள்ளார். அவர் நான் கண்டிப்பாக ஓட்டு போட்டே ஆக வேண்டும் என போலீசார் உடன் வாக்குவாதம் செய்த நிலையில் இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. மேலும் சர்க்கார் பட பாணியில் தங்களுடைய ஓட்டை யாரோ போட்டு விட்டதாக அடுத்தடுத்து பெண்கள் புகார் கூறியதால் தற்போது அடுத்தடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.