அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் தற்போது எஸ் பி வேலுமணியை தலைமையில் இன்னொரு அணியும் செயல்படுவது வெட்ட வெளிச்சமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக 11 தோல்விகளை சந்தித்ததால் தற்போது பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு பிறகு தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி தேர்வு செய்வதாக கடிதம் வழங்கினர்.

இந்த நிலையில் தற்போது எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான 30 அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக நியமிக்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து மனு வழங்கியுள்ளனர். மேலும் இது தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.