தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டசபை கூட்ட தொடர் முடிவடைந்த பிறகு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை கட்டி அணைத்து வரவேற்ற நிலையில் ஸ்டாலினும் கட்டி அணைத்து கையில் பிடித்து வரவேற்று அழைத்துச் சென்றார். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது வீட்டிற்கே சென்ற முதல்வர் விஜய் சந்தித்தார்.
அப்போது துரை வைகோ மற்றும் வைகோவின் குடும்பத்தினர் உற்சாகமாக விஜய்க்கு வரவேற்பு கொடுத்த நிலையில் வைகோ தன் வீட்டில் உள்ள பணிப்பெண்கள் அனைவரையும் முதல்வர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை புகைப்படம் எடுக்க வைத்தது தான் ஹைலைட். தமிழகத்தில் அண்ணாவுக்கு பிறகு இப்படி மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டிற்கு நேரில் வந்து வாழ்த்து வாங்கியது முதலமைச்சர் விஜய் தான் என வைகோ நெகிழ்ச்சியோடு கூறினார். இதேபோன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் என்னுடைய அன்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளேன் என கூறிய நிலையில் திருமாவளவனோ அரசியல் முயற்சியோடு நாகரீகத்தோடு விஜய் நடந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் விஜய் அன்புமணியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். சென்னை அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய் அன்புமணி ராமதாசை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் அவருடன் எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் உடன் இருந்தார். முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு வந்ததும் அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வாசலுக்கே சென்று அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனை தொடர்ந்து தற்போது சீமான் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். ஏற்கனவே விஜய் வரவேற்பதற்காக சீமான் வாசலில் காத்திருந்த நிலையில் முதல்வர் விஜய் வந்ததும் அவரை அன்போடு வீட்டிற்குள் அழைத்து சென்றார். மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டிற்கும் ஒரு முதல்வர் சென்றது பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் பார்க்கப்படுகிறது.
