சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது