தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் விசைத்தறி பெண்களை குறி வைத்து கிட்னி திருட்டு நடப்பதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய விஜய், இந்த பாசிச பாஜக அரசோடு நாங்கள் எப்போதுமே ஒத்து போக மாட்டோம். குறிப்பாக திமுகவைப் போன்று பாஜகவோடு மறைமுக உறவில் இருக்க மாட்டோம்.
மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என சொல்லிவிட்டு ஜெயலலிதா அவர்கள் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு பாஜகவுடன் பொருந்தாத கூட்டணி வைத்துள்ள அவர்களுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டு நலனுக்காக என்று சொல்ல மாட்டோம் என்றார்.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி என்று கூறுகிறார். மேலும் இதனை குறிப்பிட்டு தான் நடிகர் விஜய் அதிமுக பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.
