பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களுக்குள் டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த உத்தரவால், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தெளிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.