தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருக்கும் நிலையில் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது ஆதரவை கொடுப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இன்னும் தங்களுடைய முடிவை அறிவிக்காத நிலையில் அவர்களும் ஆதரவு கொடுத்தால் 118 என்ற பெரும்பான்மை கிடைத்து விடும். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பத்மநாதபுரம் எம்எல்ஏ செல்ல சுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிலையான ஜனநாயக அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது.
