இந்தியாவுக்கு 25 இல்லை… 50 சதவீத வரி விதிக்கிறேன்…”  திடீரென முடிவை மாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலதிகமாக 25% வரி விதிப்பதாக இன்று (ஆகஸ்ட் 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம், இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகள் காணப்படுகின்றன. கடந்த நாட்களில் 25% வரி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.