தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 520 ரூபாய் உயர்ந்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்நிலையில் சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரண தங்கம் 45 ஆயிரம் ரூபாயை கடந்து உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபர் 2 தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 690 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 2.90 காசுகள் உயர்ந்து 80.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.