தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநரை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநர் மாளிகை மிகத்தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

அதாவது, ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் சட்டசபையில் போதிய பலம் (Majority) இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.

ஆனால், தற்போதைய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியமைப்பதற்கான அந்தத் தேவையான பெரும்பான்மை இடங்கள் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி, விஜய்யிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இதையே ஆளுநர் மாளிகை தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கியுள்ளது. இதன் மூலம், வெறும் விருப்பம் மட்டும் போதாது, சட்ட ரீதியான பலம் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க உரிமை கோர முடியும் என்பது விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.