தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலந்தாழ்த்தும் ஆளுநரின் போக்கை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். “ஆளுநர் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாது என்றால், ஒரே ஒரு இடத்தில் வென்றுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியுமா?” என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த…
— Jothimani (@jothims) May 7, 2026
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழக மக்களின் தீர்ப்பை ஆளுநர் மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு என அவர் எச்சரித்துள்ளார். விஜய்க்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக ஜோதிமணி விடுத்துள்ள இந்தப் பதிவு, தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
