தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் திருமயம் தொகுதியில் களம் கண்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் தங்களது தொகுதிகளைத் தக்கவைத்து மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியுள்ளனர். தொகுதி மக்களின் பேராதரவுடன் அவர்கள் பெற்ற இந்த வெற்றி, திமுகவின் கோட்டைகளை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்  தேர்தலிலேயே அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர்  ஜோசப் விஜய் சுமார் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அதேபோல், ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்தி மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் சேலம் மேற்கு சட்டமன்ற தேர்தலில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் லட்சுமணன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.