பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்தக் கொலைக்கே தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் முதற்குற்றவாளி (A1) ரௌடி நாகேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாகேந்திரன், கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், இன்று (அக்டோபர் 9) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மரணம் குறித்த தகவல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை பாதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
