சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,200 எனவும், ஒரு கிராம் ரூ.11,400 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளியின் விலையும் ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.171-ஆகவும், ஒரு கிலோ ரூ.1,71,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் இந்த உயர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
