தமிழக அரசியலை மையமாகக் கொண்டு பிரபல செய்தி சேனல் ஒன்றில் “எதை நோக்கி நகர்கிறது 2026 தேர்தல் களம்” என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட விளம்பரப் போஸ்டரில் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அமித்ஷா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர், அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், கடந்த சில தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் கணிசமான முன்னேற்றத்தை எட்டி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் புகைப்படம் அந்த போஸ்டரில் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காலங்கள் மாறலாம். குணசேகரனின் சில்லறைப்புத்தி மாறாது. pic.twitter.com/SjSSq1NkkC
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 7, 2025
“>
இதனை கண்டிக்கும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் “காலங்கள் மாறலாம், குணசேகரனின் சில்லறை புத்தி மாறாது” என எரிச்சலுடன் பதிவு செய்து விமர்சித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களிடையே கோபத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனால், 2026 தேர்தல் களத்துக்கான அரசியல் சூழல் தொடங்குவதற்கு முன்பாகவே விவாதமும் வாக்குவாதமும் தீவிரமடைந்துள்ளது.
