தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி இன்று உச்சகட்ட நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு 85 வயது ஆகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக தான் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணி மரணமடைந்தார். தற்போது அவரது தாயாரும் மரணம் அடைந்துள்ளது அஜித்குமார் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் துபாய் சென்றுள்ள அவர் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்புகிறார்.
நாளை தாயாரின் இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த வகையில் முதலமைச்சர் விஜயும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருமை நண்பர் அஜித்குமாரின் தாயார் மரணமடைந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
