தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுப்பிரிவினருக்கு 32 வயது வரம்பாகவும், BC, MBC மற்றும் DNC பிரிவினருக்கு 39 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், SC, ST மற்றும் கைம்பெண்களுக்கு 42 வயது வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. மேலும், கிராம உதவியாளராக நியமிக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான வயது விவரத்தை மாவட்ட ஆட்சியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அரசு வேலைக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல தரப்பினருக்கும் புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.