கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுடன் இருந்து வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 22) தங்கத்தின் விலை மீண்டும்  உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்  ரூ.10,360 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து  ரூ.82,880  என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று பெரிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ. 83,000  நெருங்கியுள்ளது .  நகை வாங்க விரும்பும் பொதுமக்களில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வருவது, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.