சென்னை சிறப்பு நீதிமன்றம் நில மோசடி தொடர்பான வழக்கில் அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதாவது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு உள்ளது.

மேலும் மே 23ஆம் தேதி இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகவில்லை எனில் குற்றசாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது..