அதிமுகவின் தேர்தல் கூட்டணியில், தமிழர் தேசம் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இக்கட்சியின் நிறுவனர் மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் K.K.செல்வகுமார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, வாள் ஒன்றை பரிசளித்து தனது முழுமையான ஆதரவை தெரிவித்தார். செல்வகுமார் வழங்கிய வாள், தனது கூட்டணிக் கட்சி உறுதிப் பாசமாக இருக்கிறது எனவும், இனப்பெருமை மற்றும் தமிழர் உரிமைக் குரலுக்கு தம் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

“>

 

டெல்டா மாவட்டங்களில் பரவலாக இருக்கும் வீரமுத்தரையர் சமூகத்தின் முக்கியப் பிரதிநிதியாகக் கருதப்படும் K.K.செல்வகுமார் ஆதரவு, அதிமுகவுக்கு தேர்தல் போக்கில் முக்கிய பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய இணைப்பு, தமிழகத்தின் சமூகச் சூழலிலும், அரசியல் கணக்குகளிலும் அதிமுகவுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்து உள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.