அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை என்ற விமர்சனம் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இந்தத் தகவல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டமும் திடீரென ரத்தாகியுள்ளதால் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எனி படையெடுப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
