நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாகவும், நட்சத்திரப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர் காளியம்மாள். கடந்த சில காலங்களாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.
இந்நிலையில், காளியம்மாள் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் இன்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் தனித்து செயல்பட்டு வந்த நிலையில் அவர் திமுக அல்லது தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் முக்கியமான அதிரடி பேச்சாளரை அதிமுகவில் இணைத்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
