அதிமுக கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கினார். இதுகுறித்து பேசிய செங்கோட்டையன் தன்னிடம் விளக்கம் எதுவும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தமாக இருப்பதாக கூறினார்.
அதே நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கியதற்கு நன்றி தெரிவித்தும் இனி தன்னுடைய ஒருங்கிணைப்பு பணிகள் தொடரும் என்றும் கூறினார். இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதில் முன்னாள் எம்பி சத்திய பாமா மற்றும் ஐடி பிரிவு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்குவார்கள். மேலும் இவர்கள் அனைவரும் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது போன்று தங்களையும் நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
