அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளதாக மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல மாத இடைவெளிக்கு பிறகு அஜித் இப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டு காட்சிகள் அதிகம் கொண்ட இப்படத்தின் ஷூட்டிங், அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் படக்குழு அடுத்த நாட்டிற்கு நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.