பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் விஜயகுமார் (70) உடல் நலக்குறைவால் காலமானார். அர்னால்டு, சில்வர்ஸ்டர் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் இவர்தான். பும்பா மற்றும் பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.