காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்து அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.