இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து நேற்று விஸ்தாரா விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 290 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது கீழே ஒரு துண்டு காகிதம் இருப்பதை பார்த்தனர். அதனை எடுத்து படித்தபோது விமானத்தில் வெடிகொண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த ஊழியர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா? என தீவிரமாக சோதனை செய்தனர். ஆனாலும் எந்த பொருளும் கிடைக்கவில்லை. தொடர்ந்து டெல்லியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. உடனே விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நம்புனார்கள் விமானம் முழுவதும் சோதனையை நடத்தி வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.