சீனாவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தன்னாட்சி கார் (Autonomous Vehicle) ஒன்று, மனிதர்களைப் போல தன் செல்லப் பெயரைக் கூப்பிட்ட உடனே சிக்னல் கொடுத்து ஓடி வரும் மிரட்டலான வீடியோ இன்ஸ்டாகிராம் (Instagram) ரீல்ஸ்களில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டு தனது காருக்கு வைத்துள்ள ஒரு விசித்திரப் பெயரைச் சொல்லி சத்தமாகக் கூப்பிடுகிறார்.

உடனே அந்தச் சிக்னலைப் பெற்றுக் கொண்ட கார், “நான் இங்கதான் இருக்கேன்!” என்பது போல லைட்டுகளை ஒளிரச் செய்து, ஹார்ன் சத்தத்துடன் ரிப்ளை கொடுக்கிறது. அதன் பிறகு அவர் “இங்கே வா” என்று கட்டளையிட்ட உடனே, டிரைவர் எவருமே இன்றி பார்க்கிங் லாட்டில் இருந்து மிக நளினமாகப் புறப்பட்டு அவர் முன்னால் வந்து நிற்கிறது. ​இந்த அதிநவீன வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அட்வான்ஸ்டு சென்சார்கள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் வாய்ஸ் ரெகக்னிஷன் (Voice Recognition) கொண்ட ஏஐ (AI) சிஸ்டம் ஆகியவை, ஓனரின் குரலைத் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ப காரைப் பாதுகாப்பாக இயக்க உதவுகின்றன.

நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் பெயர் சொல்லி அழைத்தால் ஓடி வருவது போல, காரும் சைகை காட்டிவிட்டுத் தேடி வரும் இந்த அதிசயக் காட்சி, ஸ்மார்ட் வாகனத் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது காருக்கு வச்ச பேரா, இல்ல நாய் குட்டிக்கு வச்ச பேரா?” என்று வியந்து கமெண்டுகளையும், ஹார்ட்டின்களையும் அள்ளி குவித்து வருகின்றனர்.