தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா நந்தினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

https://twitter.com/LycaProductions/status/1641115033211121665?t=Jm4mii6fPuEgtSer0dgd3g&s=19