தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 71. இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சரத் பாபு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சரத் பாபு ரஜினியோடு பல திரைப்படங்களில் இணைந்து ஒன்றாக அடித்துள்ளார். இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.