
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு எதிராக NIA நடவடிக்கை எடுத்து இருக்கு. ஆனால் யார் எடுத்து இருக்கணும் ? சட்ட ஒழுங்கை காப்பாத்துற காவல்துறை என்ன பண்றீங்க ? ஏன் நடவடிக்கை எடுக்கல ? இதுக்கு ஏன் NIA வரணும. அப்படி என்றால், நீங்கள் கடமை தவறி இருக்கிறீர்கள்…
உங்க கடைமையை நீங்கள் செய்யல NIA வர வேண்டியதா இருக்கிறது. ஆகவே தேச விரோதிகளுக்கு எதிராக, கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்ற காவல் துறையை கண்டித்து, அவர்களுடைய அரசியல் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி போராட வேண்டியது இருக்கும். அப்படிங்கிறத நான் தெரிவிக்கிறேன்.
தேர்தலுக்கு முன்னாடி பாஜகவும் அதிமுகவும் இணைவதற்கு வாய்ப்பிருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
பாஜக ஆல் இந்தியா பொலிடிகல் பார்ட்டி. எங்களுக்கு இது பற்றி, கூட்டணி பற்றி ஒட்டு வழிகாட்டல் இருக்கு. இதை அகில இந்திய தலைமை தான் முடிவு பண்ணும். அதனால அகில இந்திய தலைமை முடிவுக்குள்ள நான் நுழைவது சரியாக இருக்காது.அதனால கூட்டணி பற்றி முடிவு எடுக்க வேண்டியவர்கள் அகில இந்திய தலைவர்கள். அதனால அதை பற்றி நான் பேசுவதற்கு முறையாக இருக்காது என்பதால் கருத்து சொல்ல மாட்டேன் என பேசினார்.