
தமிழகத்தில் பிஜேபி மலர்ந்திருக்கிறார்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
வளர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் சின்னத்தை பத்தி சொல்கிறீர்கள். நான் அதன் வளர்ச்சியை பற்றி சொல்கிறேன், வளர்ந்திருக்கிறார்கள். அதான் டெய்லி அண்ணாமலை பதிலடி கொடுத்துகிட்டே இருக்கிறாரே. பிரிலிம்ஸ்ல வெற்றி பெற்றால், தேர்ச்சி பெற்றால் அரசியலை விட்டு போறேன் என்றெல்லாம் சொல்லி இருக்காரே…
டெய்லி அண்ணாமலை நியூஸ் நீங்க போடுறீங்க இல்ல… எல்லாத்தையும் சுத்திட்டு தான் வராரு… தமிழிசை அவங்க இருந்தப்போ செய்தியில் இருந்துட்டு இருந்தாங்க…. இன்னைக்கு அண்ணாமலையும் செய்தியில் இருந்துட்டு இருக்காங்க. எல்லாருக்கும் ஈடு கொடுத்து ஏதோ பேசிட்டு இருக்காங்க இல்ல, அப்ப வளர்ந்து இருக்குனு தானே அர்த்தம்…
உதயநிதி பேசுகின்ற பேச்சுக்கு அண்ணாமலை கொச்சையாக பதில் சொல்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
அதுக்கு உதயநிதி அவர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அவர்தான் பதிலடி கொடுக்கணும். அந்த இதுக்குள்ள நான் போகல. ஏன்னா…. நான் ஒரு நாகரிகமான அரசியலை சிந்தித்து, எல்லாரும் போகணும்னு நினைக்கிறேன்… இன்னைக்கும் அவங்களுக்கு என்னுடைய அட்வைஸ்… எல்லாரும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்….. எல்லாரும் பர்சனல் அட்டாக் செய்யாமல், அது மட்டும் அரசியல் அல்ல. மக்களுக்காக நாம் பயணிக்கணும். மக்களுக்கான சேவை செய்வதில் முற்படுவோம் என்று நான் நினைக்கிறேன் என பேசினார்.